நிலக்கோட்டை அருகே மைனர் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர்

நிலக்கோட்டை அருகே மைனர் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நிலக்கோட்டை அருகே மைனர் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர்
Published on

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே உள்ள சிங்காரகோட்டை கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பெண் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் மகன் தங்கபாண்டி (21) என்பவர் கடந்த 2 வருடங்களாக அவரை காதலித்து வந்துள்ளார்.

இந்த விபரம் பெண்ணின் தாயாருக்கு தெரியவரவே தனது மகளை விடுதி மில்லிலேயே தங்க வைத்தார். இருந்த போதும் தங்கபாண்டி அவருடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை கோயம்புத்தூருக்கு அழைத்துச் சென்று தனி அறையில் தங்க வைத்து பல முறை பலாத்காரம் செய்து உள்ளார்.

தனது மகள் விடுதியில் இருந்து வெளியே சென்ற விபரம் தெரியவரவே பல இடங்களில் தேடிப் பார்த்தார். அப்போது தங்கபாண்டி அவரை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் தேவி மைனர் பெண்ணை கடத்தி கற்பழித்த தங்கபாண்டியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

பின்னர் அவரை சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணை காப்பகத்தில் ஒப்படைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com