தேனி அருகே திருமணத்திற்கு மைனர் பெண்ணை கடத்தியவர் கைது

தேனி அருகே திருமணத்திற்கு மைனர் பெண்ணை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
தேனி அருகே திருமணத்திற்கு மைனர் பெண்ணை கடத்தியவர் கைது
Published on

உத்தமபாளையம்:

தேனி அருகே உத்தமபாளையம் ஆனைமலை யான்பட்டி பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்த 17 வயது இளம்பெண் தனது தோழி வீட்டிற்கு சென்றபோது மாயமானார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் இது குறித்து ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மைனர்பெண்ணை தேடி வந்தனர்.

இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியதில் போடி அருகே உள்ள சிலமலை மணியம்பட்டி இந்திரா காலனியை சேர்ந்த அர்ஜூனன் (வயது24) என்பவர்தான் மைனர் பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அர்ஜூனனை போலீசார் கைது செய்தனர். சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com