திருமணம் நிச்சயிக்கப்பட்ட கல்லூரி மாணவி கடத்தல்: போலீசில் தாய் புகார்

திருநாவலூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட கல்லூரி மாணவி கடத்தப்பட்டது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட கல்லூரி மாணவி கடத்தல்: போலீசில் தாய் புகார்
Published on

விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரை அடுத்த இருந்தை காலனியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் டென்னிஸ்ராணி(வயது 25). இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ. படித்து வருகிறார். இவருக்கும் விழுப்புரம் அருகே உள்ள முட்டத்தூர் கிராமத்தை சேர்ந்த பால்சுகுமார் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

பால்சுகுமார் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதை தொடர்ந்து ஏழுமலை பத்திரிகை அடித்து உறவினர்களுக்கு கொடுத்து வந்தார்.

அதேபோல் பால்சு குமாரும் உறவினர்களுக்கு திருமண பத்திரிக்கை கொடுத்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்த டென்னிஸ்ராணியை திடீரென்று காணவில்லை. இதனால் கவலை அடைந்த ஏழுமலை மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் அவரை காணவில்லை.

இந்தநிலையில் டென்னிஸ்ராணியின் தாய் விக்டோரியா திருநாவலூர் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

எனது மகள் டென்னிஸ்ரானியை இருந்தை காலனியை சேர்ந்த மகேந்திரன்(25) என்பவர் கடத்தி சென்று விட்டார். கடத்தப்பட்ட என் மகளை மீட்டு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து கடத்தப்பட்ட டென்னிஸ்ராணி மற்றும் மகேந்திரனை போலீசார் தேடி வருகின்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com