ஆசை வார்த்தை கூறி சிறுமி கடத்தல்: வேன் டிரைவர் மீது போலீசார் வழக்கு

பவானி அருகே ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்ற வேன் டிரைவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
கடத்தல்
கடத்தல்
Published on

பவானி:

பவானியை அடுத்த கல்பாவி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்தார்.

அப்போது பவானியை அடுத்த குறிச்சியைச் சேர்ந்த அமாசை மகன் ஈஸ்வரன் (32), அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி வந்துள்ளார்.

வேன் டிரைவரான ஈஸ்வரன், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த சிறுமியை கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த சிறுமியின் பெற்றோர் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் விநோதினி, சிறுமியைக் கடத்திச் சென்ற ஈஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com