மாணவியை கடத்தி பாலியல் தொல்லை- பா.ம.க. பிரமுகர் கைது

சென்னையில் திருமண ஆசை காட்டி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த பா.ம.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

அண்ணாநகர்:

சென்னை டி.பி.சத்திரத்தை சேர்ந்தவர் சத்யா. பா.ம.க. பிரமுகரான இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவருக்கு பேஸ்புக் மூலம் அண்ணாநகரை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி மாயமானார். அவரை சத்யா திருமண ஆசை காட்டி அழைத்து சென்று இருப்பது தெரிந்தது.

இதுகுறித்து மாணவியின் தாய் டி.பி.சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த நிலையில் அந்த மாணவி வீட்டுக்கு திரும்பி வந்தார். அவரிடம் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சத்யா திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பா.ம.க. பிரமுகர் சத்யாவை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com