வெள்ளிச்சந்தையில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி கடத்தல்- மாணவர் மீது வழக்கு

வெள்ளிச்சந்தையில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவியை கடத்திய சென்ற மாணவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகிறார்கள்.
வெள்ளிச்சந்தையில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி கடத்தல்- மாணவர் மீது வழக்கு
Published on

நாகர்கோவில்:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 48). இவரது மகள் குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.

இங்குள்ள விடுதியில் தங்கி படித்துவந்த அவர் திடீரென மாயமானார். இதையடுத்து அவரது தந்தை மகளை தேடி கல்லூரிக்கு சென்றார். அங்கு விசாரித்த போது அவரை அதே கல்லூரியில் படித்த மாணவர் ஒருவர் கடத்திச் சென்று இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அந்தோணி ராஜ் நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகள் வெள்ளிச்சந்தை அருகே உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருவதாகவும், கல்லூரி விடுமுறை விட்டதை அடுத்து வீட்டுக்கு வருவதாக கூறினார். நான் மகளை தேடி பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். ஆனால் அவர் அங்கு வந்து சேர வில்லை. இதனால் எனது மகளை தேடி கல்லூரிக்கு வந்தேன்.

சக மாணவிகளிடம் விசாரித்த போது எனது மகள் வெள்ளிச்சந்தையில் இருந்து பஸ் ஏறி நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையத்தில் இறங்கியதாக கூறினார்கள். எனது மகளை அதே கல்லூரியில் படிக்கும் வெள்ளிச் சந்தை பகுதியை மாணவர் ஒருவர் கடத்திச் சென்று இருப்பதாகவும் தெரிவித்தனர். எனது மகளை மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இது குறித்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தாகுமாரி விசாரணை நடத்தினார். இதையடுத்து அந்தோணிராஜின் மகளை கடத்திச் சென்ற மாணவர் மீது இந்திய தண்டனை சட்டம் 366 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள். 18 வயது நிரம்ப இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் மாணவி கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com