திருச்சியில் கல்லூரி மாணவிகள் கடத்தல்?

திருச்சியில் கல்லூரிக்கு சென்ற மாணவிகள் வீடு திரும்பாதது குறித்து மாணவிகளின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் 2 பேரையும் தேடி வருகிறார்கள்.
கடத்தல்
கடத்தல்
Published on

திருச்சி:

திருச்சி ஸ்ரீரங்கம் கீழ அடைவளஞ்சான் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகள் லலிதா (வயது 19).

திருச்சி பாலக்கரை மல்லிகைபுரத்தை சேர்ந்த மணிவேல் மகள் அடைக்கல ஆஷிதா(19). இவர்கள் இருவரும் திருச்சியில் உள்ள பிரபல கல்லூரியில் பி.பி.ஏ.2-ம் ஆண்டு படித்து வந்தனர். கடந்த 18-ந்தேதி கல்லூரிக்கு சென்ற இருவரும் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை. அவர்களை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து உறையூர் போலீசில் மாணவிகளின் பெற்றோர் புகார் செய்தனர்.அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, மாணவிகள் எங்கு சென்றனர். படிக்க பிடிக்காததால் வீட்டை விட்டு சென்றனரா? அல்லது யாரேனும் கடத்தி சென்றார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி 2 பேரையும் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com