நத்தம் அருகே காரில் கடத்தி டிரைவர் அடித்து கொலை

நத்தம் அருகே நிலத் தகராறில் டிரைவரை அடித்து கொன்ற 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை
கொலை
Published on

நத்தம்:

நத்தம் அருகே உள்ள கல்வேலிப்பட்டி பகுதியில் ரத்தக்காயங்களுடன் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து நத்தம் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணையில் இறந்தவர் செல்லப்ப நாயக்கன் பட்டியைச் சேர்ந்த கருப்பணன் (வயது 45) என்பதும், இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தவர் எனவும் தெரியவந்தது. அவரது வீட்டில் போலீசார் விசாரணை நடத்தினர். உறவினர்கள் சிலர் காரில் அழைத்துச் சென்றதாகவும், அதன் பிறகு வீடு திரும்பவில்லை எனவும் தெரிவித்தனர்.

கருப்பணன் உடலின் பல பாகங்களில் காயங்கள் இருந்தது. எனவே அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் நிலப்பிரச்சினை தொடர்பாக அவரது உறவினர்கள் சிலர் கருப்பணன் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.

எனவே அவர்கள்தான் இந்த கொலையை செய்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகித்தனர். இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டியன், சரவணன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் கொலையில் தொடர்புடைய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com