மதுரையில் 2 மாணவிகள் கடத்தல்- வாலிபர்கள் மீது புகார்

மதுரையில் 2 மாணவிகள் கடத்தப்பட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடத்தல்
கடத்தல்
Published on

மதுரை:

மதுரை தெப்பக்குளம் புதுராமநாதபுரம் சாலை பாத்திமா ஜூம்மா தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் வைஷ்ணவி (வயது20). தொலைதூர கல்வி மூலம் பி.காம். படித்து வருகிறார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த வைஷ்ணவி வெளியே சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்காததால் தெப்பக்குளம் போலீசில் மணிகண்டன் புகார் செய்தார்.

அதில், உறவினர் நவீன் சந்துருவுடன் வைஷ்ணவி பழகி வந்ததை கண்டித்ததாகவும், அதன் பிறகே அவர் மாயமாகி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் விராட்டிபத்து இருளாண்டி காலனியைச் சேர்ந்தவர் செந்தூர்பாண்டியன். இவரது மகள் சரசுவதி (21). இவர் ஆரப்பாளையத்தில் உள்ள போட்டி தேர்வு மையத்தில் படித்து வந்தார்.

அப்போது அங்கு படித்த தென்காசியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருடன் காதல் ஏற்பட்டது. இந்த நிலையில் சரசுவதி மாயமாகி விட்டார்.

இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் செந்தூர்பாண்டி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com