வடக்கு தாமரைகுளத்தில் 10-ம் வகுப்பு மாணவி கடத்தல்- வாலிபர் மீது வழக்குப்பதிவு

10-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற வாலிபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இருவரையும் தேடி வருகிறார்கள்.
கடத்தல்
கடத்தல்
Published on

நாகர்கோவில்:

சாமித்தோப்பு அருகே வடக்கு தாமரைகுளம் கல் குரும்பொற்றை பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பொன்னீஷ் (வயது 27) என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மாணவியை கண்டித்தனர்.

இந்த நிலையில் வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பொன்னீசும் மாயமாகி உள்ளார். எனவே மாணவியை பொன்னீஷ் கடத்திச் சென்றிருக்கலாம் என்று தெரிகிறது.

இது குறித்து மாணவியின் தாயார், கன்னியாகுமரி மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பொன்னீஷ் மீது போலீசார் இந்திய தண்டனைச்சட்டம் 366 ஐ.பி.சி. பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

வாலிபரின் செல்போன் எண்ணை போலீசார் கைப்பற்றி உள்ளனர். செல்போன் டவர் உதவியுடன் மாணவியை மீட்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com