அடித்து உதைத்ததாக முன்னாள் மனைவிகள் புகார்: டிரம்ப்புக்கு நெருக்கமானவர் ராஜினாமா

தங்களை அடித்து உதைத்ததாக முன்னாள் இரு மனைவிகள் குற்றம் சாட்டியதை அடுத்து, அதிபர் டிரம்புக்கு மிக நெருக்கமானவரும், வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியுமான ராப் போர்ட்மன் ராஜினாமா செய்துள்ளார்.
அடித்து உதைத்ததாக முன்னாள் மனைவிகள் புகார்: டிரம்ப்புக்கு நெருக்கமானவர் ராஜினாமா
Published on

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபரின் நெருக்கமான நண்பராக வலம் வந்தவர் ராப் போர்ட்மன். தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்ப்பின் கூடவே இருந்த போர்ட்மன், பின்னாளில் வெள்ளை மாளிகையின் பணியாளர் செயலராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், போர்ட்மேனின் முன்னாள் மனைவிகள் கொடுத்த பேட்டி அவருக்கு தலைவலியை கொடுத்துள்ளது.

கோல்பை ஹோல்டர்னெஸ் மற்றும் ஜெனிபர் வில்லோபை ஆகிய இரு மனைவிகளும் பிரிட்டன் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்தனர். அதில், தங்களை போர்ட்மன் அடித்து, உதைத்து சித்திரவதை செய்ததாக புகார் பட்டியல் வாசித்தனர். இதனால், போர்ட்மனுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

தன் மீதான புகாரை மறுத்த போர்ட்மன் தனக்கு எதிராக சதி நடப்பதாக பேட்டியளித்தார். இந்நிலையில், போர்ட்மன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் சாரா சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார். அதிபர் டிரம்ப் மீதும் தேர்தலின் சமயத்தில் சுமார் 15 பெண்கள் செக்ஸ் புகாரளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com