சிலை திருட்டு வழக்கில் கேரள வாலிபர் கைது

வத்தலக்குண்டுவில் சிலை திருட்டு வழக்கில் கேரள வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிலை திருட்டு வழக்கில் கேரள வாலிபர் கைது
Published on

திண்டுக்கல்:

வத்தலக்குண்டுவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 2017-ம் ஆண்டு 9 கிலோ எடையுள்ள புத்தர் சிலை மற்றும் 15 கிலோ எடை கொண்ட கிருஷ்ணன் சிலை ஆகியவை திருடு போனது. இது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரில் ஆஸ்பத்திரியில் டிரைவராக பணிபரிந்த கேரளாவைச் சேர்ந்த ஜோதீஸ் (வயது 31) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரும் தனிப்படை அமைத்து ஜோதீசை தேடி வந்தனர். வத்தலக்குண்டு அருகே சுற்றித் திரிந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் சிலை கடத்தலில் தேடப்பட்டு வந்த ஜோதீஸ் என தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து நிலக்கோட்டை சிறையில் அடைத்தனர். வேறு ஏதேனும் சிலை கடத்தல் சம்பவத்தில் அவர் ஈடுபட்டுள்ளாரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com