சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை - பாதிரியார் கைது

கேரள மாநிலம் கொச்சி அருகே சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியாரை போலீசார் கைது செய்தனர். அவர்மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது
கைது
Published on

கொச்சி:

கேரள மாநிலம் கொச்சி அருகே பெரும்பாடம் என்ற இடத்தில், சிறுவர் இல்லம் உள்ளது. அதில், ஏழை குடும்ப சிறுவர்களுக்கு தங்குமிடமும், கல்வியும் இலவசமாக அளித்து வருகிறார்கள்.

அங்குள்ள சிறுவர்களை சிறுவர் இல்ல நிர்வாகியும், கிறிஸ்தவ பாதிரியாருமான ஜார்ஜ் (வயது 40), பாலியல்ரீதியாக துன்புறுத்தி வந்தார். இதனால், அடுத்தடுத்து சிறுவர்கள் பலர் தப்பி ஓடி விட்டனர். அவர்களில் சிலர் தங்கள் பெற்றோருக்கு தொலைபேசியில் கூறியதை தொடர்ந்து, ஜார்ஜ் மீது பெற்றோர் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில், ஜார்ஜை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com