கேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கின் முக்கிய சாட்சி ஜலந்தரில் மரணம்

கேரள பாதிரியாருக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்கின் முக்கிய சாட்சியான பாதிரியார் ஒருவர் ஜலந்தரில் இன்று மரணம் அடைந்தார். #KeralaNunCase #FrancoMulakkal
கேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கின் முக்கிய சாட்சி ஜலந்தரில் மரணம்
Published on

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஜலந்தர் மறை மாவட்ட பேராயராக இருந்தவர் பிராங்கோ மூலக்கல். இவர் மீது கேரளாவின் கோட்டயம் மாவட்டம், குருவிளங்காடு கான்வென்ட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்தார்.  இதுதொடர்பாக பிராங்கோ 3 நாள் விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். பின்னர் ஐகோர்ட் மூலம் ஜாமீன் பெற்றார்.

இந்நிலையில், பேராயர் பிராங்கோவுக்கு எதிரான பாலியல் வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள ஜலந்தரைச் சேர்ந்த பாதிரியார் குரியகோஸ் கட்டுதரா (வயது 62) இன்று திடீரென உயிரிழந்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரின் தசுயா பகுதியில் உள்ள செயின்ட் பால் தேவாலயத்தில் அவர் தங்கியிருந்த அறையில் இறந்து கிடந்தார். அவரது மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிரியார் குரியகோஸ் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பி உள்ளனர். பேராயர் பிராங்கோ மூலக்கலுக்கு எதிராக சாட்சியம் அளித்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது சகோதரர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com