பிராங்கோ முல்லக்கல்லிடம் மூன்றாவது நாளாக தொடரும் விசாரணை - கைதாக வாய்ப்பு

கேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மூன்றாவது நாளாக ஜலந்தர் முன்னாள் பிஷப் பிராங்கோ முல்லக்கல்லிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #KeralaNun #FrancoMulakkal
பிராங்கோ முல்லக்கல்லிடம் மூன்றாவது நாளாக தொடரும் விசாரணை - கைதாக வாய்ப்பு
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பி‌ஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறினார்.

கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்ததால் கோட்டயம் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள். பிராங்கோ முல்லக்கல் இந்த புகார் தொடர்பான இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியதன் பெயரில் அவர் நேற்று முன்தினம் ஆஜரானார். 

கடந்த இரண்டு நாளாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில், இன்று மூன்றாவது நாளாக விசாரணை தொடர்கிறது. விசாரணையின் முடிவில் இன்று அவர் கைதாக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, ஜலந்தர் பிஷப் பொறுப்பில் இருந்த பிராங்கோவை கத்தோலிக்க தலமையகமான வாடிகன் பதவி நீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com