மலையாள நடிகையை கடத்தி பாலியல் பலாத்காரம்: நடிகர் திலீப் ஜாமினில் விடுவிப்பு

நடிகையை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் கைதான மலையாள நடிகர் திலீப் 85 நாட்களுக்கு பிறகு இன்று ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
மலையாள நடிகையை கடத்தி பாலியல் பலாத்காரம்: நடிகர் திலீப் ஜாமினில் விடுவிப்பு
Published on

கேரள மாநிலத்தில் திரைப்பட நடிகை ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்ட தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், பல்சர் சுனில் உள்ளிட்ட 6 பேரை கடந்த பிப்ரவரி 17-ம் தேதி போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் அடிப்படையில் பிரபல மலையாள நடிகர் திலீப் கடந்த ஜூலை மாதம் 10-ம் தேதி கைது செய்யப்பட்டார். தன்னை ஜாமினில் விடுவிக்கக்கோரி அவர் தாக்கல் செய்த 4 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில், ஐந்தாவது முறையாக அவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் நடிகர் திலீப்புக்கு ஜாமீன் வழங்கி கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திலீப் கைதாகி 85 நாட்கள் ஆகியும் போலீசார் அவர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததையடுத்து, அவரை ஜாமீனில் விடுவிப்பதாக ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com