பெற்ற குழந்தைகளை வைத்து அரை நிர்வாண உடலில் ஓவியம் - ரெகானா பாத்திமாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

குழந்தைகளை வைத்து தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைந்த விவகாரத்தில் ரெகானா பாத்திமாவின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ரெகானா பாத்திமா
ரெகானா பாத்திமா
Published on

கேரள மாநிலம் கொச்சியை அடுத்த பனம்பிள்ளியை சேர்ந்தவர் ரெகானா பாத்திமா (வயது 34). பி.எஸ்.என்.எல். முன்னாள் ஊழியரான இவர் கேரளாவில் நடந்த முத்த போராட்டத்தில் பங்கேற்றது உள்பட பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர். 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் இருமுடி கட்டி நுழைய முயன்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

கடந்த மாதம் ரெகானா பாத்திமா தன் மகன் மற்றும் மகளை, தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைய வைத்தார். அதை வீடியோ மற்றும் புகைப்படங்களாக எடுத்து கொண்டு ‘உடல் மற்றும் அரசியல்‘ என்ற தலைப்பில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். மேலும் சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ மற்றும் கருத்துகள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்த சம்பவத்திற்கு பெரும்பாலானோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ரெகானா பாத்திமா கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். தனது மனுவில், எனது குழந்தைகளுக்கு பாலியல் கல்வியை கற்றுக் கொடுக்கவே, இவ்வாறு நடந்து கொண்டேன் என்று கூறி இருந்தார்.

ஆனால் ரெகானா பாத்திமாவுக்கு ஜாமீன் வழங்க அரசு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் போலீசார் பறிமுதல் செய்த ரெகானா பாத்திமாவின் மடிக்கணினி, செல்போன் ஆகியவை திருபோனிதுராவில் தடயவியல் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்தபின்னர்தான் ஜாமீன் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிபதி உன்னிகிருஷ்ணன் விசாரணை முடிவில் ரெகானா பாத்திமாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறுகையில், “மனுதாரர் ரெகானா பாத்திமாவுக்கு வேண்டுமானால் அவரின் கொள்கையின்படி, குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்க உரிமை இருக்கிறது. ஆனால், அவை அனைத்தும் 4 சுவர்களுக்குள் அவரின் வீட்டுக்குள் நடக்க வேண்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com