குடியரசு தினவிழாவில் தலைமை ஆசிரியர்கள் மட்டுமே கொடியேற்ற வேண்டும்: கேரள அரசு சுற்றறிக்கை

குடியரசு தினவிழாவில் தலைமை ஆசிரியர் மட்டுமே பள்ளிகளில் தேசிய கொடியேற்ற வேண்டும் என கேரளா அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. #RepublicDay #KeralaGovt
குடியரசு தினவிழாவில் தலைமை ஆசிரியர்கள் மட்டுமே கொடியேற்ற வேண்டும்: கேரள அரசு சுற்றறிக்கை
Published on

திருவனந்தபுரம்:

குடியரசு தினவிழாவில் தலைமை ஆசிரியர் மட்டுமே பள்ளிகளில் தேசிய கொடியேற்ற வேண்டும் என கேரளா அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். அகில இந்திய தலைவரான மோகன் பகவத் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி கேரள மாநிலம் பாலக்காடு அருகிலுள்ள அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் நடந்த சுதந்திர தினவிழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

அரசு பள்ளியில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் அரசு பணியில் இருப்பவரோ அல்லது அரசு பதவியில் இருந்து ஓய்வுபெற்றவரோதான் கொடியேற்ற வேண்டும் என்று கூறி சர்ச்சை ஏற்பட்டது.

இதற்கிடையே, அதே பள்ளிக்கூடத்தில் நடைபெறவுள்ள குடியரசு தினவிழாவிலும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கேரளாவில் கம்யூனிஸ்டு ஆட்சி நடந்து வருகிறது. மேலும் அந்த கட்சி தொண்டர்களுக்கும், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கும் இடையே பல இடங்களில் அரசியல் மோதல்களும் நடந்து வருகிறது. இதனால் குடியரசு தினத்தன்று அங்கு மோகன்பகவத் தேசிய கொடியேற்ற கம்யூனிஸ்டு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தேசிய கொடியை ஏற்றுவது தொடா்பாக அரசு சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில், குடியரசு தினத்தன்று பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மட்டுமே தேசிய கொடியை ஏற்றவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #RepublicDay #KeralaGovt #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com