கேரளா முதல் மந்திரிக்கு அச்சுறுத்தல்: பினராயி விஜயனுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

கேரளா முதல் மந்திரிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, பினராயி விஜயனுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கேரளா முதல் மந்திரிக்கு அச்சுறுத்தல்: பினராயி விஜயனுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
Published on

திருவனந்தபுரம்:

கேரளா முதல் மந்திரிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, பினராயி விஜயனுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னங்குளம் பகுதியை சேர்ந்த ஒருவரது செல்போனில் ஒரு மெசேஜ் வந்தது. அதில், கேரளா முதல் மந்திரி பினராயி விஜயன் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக, அவர் சைபர் கிரைம் செல் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளா முதல் மந்திரியின் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com