ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் இணைந்த கென்யா-பப்புவா நியூ கினியா

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் கென்யா மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகள் புதிய உறுப்பினர்களாக இணைந்துள்ளன. #AIIB #AIIBNewMembers #KenyajoinAIIB
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் இணைந்த கென்யா-பப்புவா நியூ கினியா
Published on

பீஜிங்:

ஆசியாவில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் 100 பில்லியன் டாலர் முதலீட்டில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (ஏஐஐபி) உருவாக்கப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு தேவைப்படும் நிதியை இந்த வங்கி வழங்கும். இந்தியா, சீனா போன்ற முக்கிய நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த வங்கி பீஜிங்கை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.

2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் வங்கியை தொடங்கியபோது இதில் 57 நாடுகள் உறுப்பினர்களாக கையெழுத்திட்டிருந்தன. அதன்பின்னர் பல்வேறு நாடுகள் இந்த வங்கியின் உறுப்பினர்களாக இணைந்தனர்.

அவ்வகையில் இப்போது கென்யா மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகள் ஏஐஐபி-யின் உறுப்பினர்களாக இணைந்துள்ளன. உறுப்பினர்களாக இணைந்த இரு நாடுகளையும் மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக வங்கியின் துணை தலைவர் டேனி அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.

தற்போது ஏஐஐபி-யில் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்களாக 86 நாடுகள் உள்ளன.  இந்த முன்னேற்றம் பல வகைப்பட்ட ஒத்துழைப்பின் வாயிலாக உள்கட்டமைப்பை ஊக்குவிக்கும் வலுவான உறுதிப்பாட்டை காட்டுவதாக அலெக்சாண்டர் கூறியுள்ளார். #AIIB #AIIBNewMembers #KenyajoinAIIB

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com