

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் வருகிற 19-ந்தேதியில் இருந்து 24-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்கான நம்பர் ஒன் வீரரான கென்டோ ஜப்பான் வீரர் மொமோட்டோ, சக வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் தாய்லாந்து செல்வதற்காக ஜப்பான் விமான நிலையம் சென்றார்.
அப்போது கென்டோவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் பாசிட்டிவ் முடிவு வந்தது. ஆனால் அவருடன் வந்த மற்ற 22 வீரர்களுக்கும் கொரோனா இல்லை. இருந்தாலும் ஜப்பான் பேட்மிண்டன் சங்கம் ஒட்டுமொத்த வீரர்களும் தொடரில் இருந்து விலக இருப்பதாக தெரிவித்துள்ளது.
கென்டோ கடந்த வருடம் கார் விபத்தில் சிக்கினார். அதன்பின் தற்போதுதான் வெளிநாடு சென்று விளையாட இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.