கேளம்பாக்கம் அருகே செல்போன் பறிப்பு வழக்கில் 2 பேர் கைது

கேளம்பாக்கம் அருகே செல்போன் பறிப்பு வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தை அடுத்த தையூர், இளவந்தாங்கல் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருப்பவர் நஜ்ரூல் இஸ்லாம். அசாம்  மாநிலத்தை சேர்ந்தவர். தையூர் இளவந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான தொழிலாளியாக  பணியாற்றி வருகிறார். கடந்த 2 மாதத்திற்கு முன்பு வேலை முடித்து நடந்து சென்றபோது மர்ம நபர்கள் 2 பேர் நஜ்ரூல் இஸ்லாமை கத்தியால் வெட்டி  விட்டு அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பிச்சென்றனர். காயம் அடைந்த நஜ்ரூல் இஸ்லாம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில்  அனுமதிக்கப்பட்டார். நஜ்ரூல்இஸ்லாம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த  நிலையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்கள் குறித்து கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்  அடிப்படையில் 2 பேரை மடக்கி பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

 அவர்கள் தையூர், இளவந்தாங்கல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 19) மற்றும் அவரது நண்பர் அனில் என்ற சுனில் குமார் (20) என்பது  தெரியவந்தது. அவர்கள் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு  கத்தி, செல்போன் கைப்பற்றப்பட்டது. 

X

Maalai Malar
www.maalaimalar.com