கீரனூர் அருகே பெண் தற்கொலை

கீரனூர் அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

கீரனூர்:

கீரனூரை அடுத்த குன்றாண்டார்கோவிலை சேர்ந்தவர் பாக்யராஜ். இவருடைய மனைவி ரம்யா(வயது 29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வயிற்று வலி காரணமாக மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்த ரம்யா, சம்பவத்தன்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து உடையாளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com