கீரனூர் அருகே காட்டுக்குள் முதியவர் பிணம்

கீரனூர் அருகே காட்டுக்குள் முதியவர் பிணம்

கீரனூர் அருகே காட்டுக்குள் 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிணம் கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Published on

கீரனூர்:

புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் அருகேயுள்ள உச்சாணி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான உசிலமரக்காடு உள்ளது. இந்த காட்டில் ஒருவர் தூக்கில் தொங்குவதாக கண்ணங்குடி கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமிக்கு தகவல் கிடைத்தது. 

அவரது புகாரின் பேரில் உடையானிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரகாந்த், கீரனூர் இன்ஸ்பெக்டர் இமானுவேல் ராயப்பன் ஆகியோர் சம்பவம் நடந்த காட்டு பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். 

அங்கு சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் தான் அணிந்திருந்த ஊதா நிற வேட்டியால் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com