வடகாடு, கீரமங்கலம் பகுதிகளில் மது விற்ற 9 பேர் கைது

வடகாடு மற்றும் கீரமங்கலம் பகுதிகளில் மது விற்ற 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

வடகாடு:

வடகாடு அருகே உள்ள பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனின் தலைமையில் செயல்படும் சிறப்பு குழு மற்றும் வடகாடு சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து தலைமையிலான போலீசார் தனித்தனியாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் மது விற்றதாக மாங்காடு பூச்சிகடையை சேர்ந்த குணசேகரன் (வயது 52), புளிச்சங்காடு கைகாட்டி சிவக்குமார்(64), கொத்தமங்கலம் சுரேஷ்(27), ஆவணம் கைகாட்டி சின்னத்துரை(60) ஆகியோரை சிறப்பு குழு போலீசாரும், புள்ளான்விடுதி மற்றும் ஆலங்காடு பகுதிகளில் மது விற்ற வன்னியன்விடுதியை சேர்ந்த சுரேஷ்(37), குரும்பிவயல் வெங்கிடுசாமி(46) ஆகியோரை வடகாடு போலீசாரும் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 84 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்கள் 6 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இதேபோல் முழு ஊரடங்கையொட்டி கீரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் அப்பகுதியில் மது விற்ற கீரமங்கலம் பேரின்பராஜன், குளமங்கலம் தெற்கு சாமிநாதன், நகரம் செல்வராஜ் ஆகியோரை கீரமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com