

கீழக்கரை:
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் 17 ஆயிரத்திற்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ள நிலையில் மின் இணைப்பு எண்ணிக்கைக்கு ஏதுவாக மின் ஊழியர்கள் இல்லாத நிலை உள்ளது. மின்கம்பிகள் பல இடங்களல் வலுவிழந்து காணப்படுவதால் கீழக்கரை பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இது குறித்து கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் செயலாளர் முகைதீன் இப்ராகீம் தமிழக முதல்-அமைச்சரின் தனிப் பிரிவுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
கீழக்கரை துணை மின் நிலையத்தில் பல ஆண்டுகளாக மின் கம்பியாளர், ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. நகரில் பழுதுகள் ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய முடியாத நிலை உள்ளது. கீழக்கரை கடற்கரை பகுதி என்பதால் லேசான காற்று வீசும்தோது கூட அடிக்கடி மின்சார கம்பிகள் அறுந்து விழுந்து மின் தடை ஏற்பட்டு வரும் நிலை உள்ளது.
இரவு நேரத்தில் ஏற்படும் மின் தடையால் அவசர காலங்களில் மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. ஆகவே கீழக்கரை நகரில் நிலவி வரும் மின்சார பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.