கீழக்கரை அருகே சூதாடிய 7 பேர் மீது வழக்கு

கீழக்கரை அருகே சூதாடிய 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வழக்கு பதிவு
வழக்கு பதிவு
Published on

கீழக்கரை:

கீழக்கரை அருகே இடிந்தகல் புதூரில் அமைந்துள்ள தென்னந்தோப்பில் சிலர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற கீழக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட கீழக்கரையை சேர்ந்த முகைதீன் அடிமை, செல்வக்குமார், காஜா, ராஜா, ஆரிப், நவாஸ், இஸ்மாயில் ஆகிய 7 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து சூதாட்ட பணம் ரூ.42,000-த்தை போலீசார் பறிமுதல் செய்ததுடன் இதுதொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com