கொடுமுடியில் காவிரி புஷ்கர விழா: வெளி மாநில சிவாச்சாரியார்கள் புனித நீராடி வழிபாடு

கொடுமுடியில் புஷ்பகர விழாவில் துறவிகள், சிவாச்சாரியார்கள், பக்தர்கள், பொதுமக்கள் அனைவரும் காவிரி ஆற்றில் மலர்கள் தூவி வழிபட்டு புனித நீராடினர்கள்.
புஷ்பகர விழாவையொட்டி கொடுமுடி காவிரி ஆற்றில் சிவாச்சாரியார்கள் வழிபாடு செய்த காட்சி.
புஷ்பகர விழாவையொட்டி கொடுமுடி காவிரி ஆற்றில் சிவாச்சாரியார்கள் வழிபாடு செய்த காட்சி.
Published on

காவிரி ஆறுகரை புரன்டோடும் இடத்தில் எல்லாம் கடந்த 8-ம்தேதி முதல் 12 நாட்களாக காவிரி புஷ்பகர விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக கொடுமுடியில் புஷ்பகர விழா நடைபெற்றது. அகில பாரத துறவிகள் பேரவை அமைப்பாளர் ராமனந்த சுவாமிகள் தலைமை தாங்கி விழாவை நடத்தினார். முன்னதாக கொடுமுடி புதுசத்திர மண்டபத்தில் வெளிமாநில துறவிகள் ஒன்று கூடி காவிரி புஷ்பகர குறித்து சொற்பொழிவாற்றினர்.

தொடர்ந்து நெடூர் அமர்நாத் சுவாமிகள், கரூர் பாலமுருக சுவாமிகள், கோவையை சேர்ந்தநிர்மலா மாதா சுவாமிகள், குஜராத்தை சேர்ந்த அம்பாபுரி சுவாமிகள் மற்றும் இந்து மக்கள் கட்சி அர்ஜீன் சம்பத் ஆகியோர் உள்பட பக்தர்கள் அனைவரும் ஊர்வலமாக காவிரி ஆற்றுக்கு வந்தனர்.

அதனை தொடர்ந்து கொடுமுடி ஆதினம் பிரபு சிவாச்சாரியர் வேதங்களை ஓதினார். தொடர்ந்து துறவிகள், சிவாச்சாரி யார்கள், பக்தர்கள், பொதுமக்கள் அனைவரும் காவிரி ஆற்றில் மலர்கள் தூவி வழிபட்டு புனித நீராடினர்கள்.அதன் பின்னர் அனைவரும் அருள்மிகு மகுடேஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். மதியம் புதுச்சத்திரம் மண்டபத்தில் அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்சியில் ஏரராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com