காட்பாடி அருகே ரெயிலில் சிறுமியிடம் சில்மி‌ஷம்: ராணுவ வீரர் கைது

காட்பாடி அருகே ரெயிலில் சிறுமியிடம் சில்மி‌ஷம் செய்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
காட்பாடி அருகே ரெயிலில் சிறுமியிடம் சில்மி‌ஷம்: ராணுவ வீரர் கைது
Published on

வேலூர்:

உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் யோகேந்திரசிங் (வயது27). ஊட்டி ராணுவ முகாமில் ராணுவ வீரராக வேலை பார்த்து வருகிறார். விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு கேரளாவில் இருந்து ஐதராபாத் செல்லும் ரெயிலில் முன்பதிவு செய்த எஸ் -3 பெட்டியில் பயணம் செய்தார்.

இதே ரெயிலில் கேரள மாநிலம் காயகுளம் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தனது 13 வயது மகளுடன் பயணம் செய்தனர்.

காட்பாடி அருகே இன்று அதிகாலை ரெயில் வந்து கொண்டிருந்தது. பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அப்போது ராணுவ வீரர் அந்த சிறுமியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அலறி கூச்சலிட்டார். திடுக்கிட்டு விழித்த பெற்றோர், மற்றும் பயணிகள் சிறுமியிடம் விசாரித்தபோது ராணுவ வீரர் யோகேந்திரசிங் அந்த சிறுமியிடம் சில்மி‌ஷம் செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் காட்பாடிக்கு ரெயில் வந்ததும் ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்தனர்.

போலீசார் விசாரணை நடத்தி ராணுவ வீரர் யோகேந்திர சிங்கை கைது செய்தனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com