காஷ்மீரில் சிறுமியை கற்பழித்தவர்களில் ஒருவன் கைது

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் சிறுமியை கடத்தி கற்பழித்தவர்களில் ஒருவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #kashmir #rape
காஷ்மீரில் சிறுமியை கற்பழித்தவர்களில் ஒருவன் கைது
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை நேற்று அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் கடத்திச்சென்று கற்பழித்தனர். மேலும், இதுகுறித்து வெளியே கூறக்கூடாது என சிறுமியை மிரட்டியுள்ளனர். ஆனால், சிறுமி இச்சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அசார் மற்றும் ரபிக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்நிலையில், கற்பழித்தவர்களில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவன் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாகியுள்ள இரண்டாவது நபரையும் போலீசர் தேடி வருகின்றனர்.

நாட்டில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகமாகி கொண்டே வருகின்றன. இது பெண்கள் பாதுகாப்பு குறித்து அனைவரிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. #kashmir #rape

X

Maalai Malar
www.maalaimalar.com