கரூர் கோவிலில் தே.மு.தி.க.வினர் சிறப்பு வழிபாடு

தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி கரூர் கோவிலில் தே.மு.தி.க.வினர் சிறப்பு வழிபாடு செய்தனர்.
கரூர் கோவிலில் தே.மு.தி.க.வினர் சிறப்பு வழிபாடு
Published on

கரூர்:

தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி கரூர் வெண்ணைமலை அய்யப்பன் கோவிலில் அபிஷேகம் செய்யப்பட்டு மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் கே.வி. தங்கவேல் தலைமை தாங்கினார். 

மாற்றுதிறனாளிகள் அணி செயலாளர் பவர்டெக்ஸ் செல்வராஜ், மாவட்ட அவை தலைவர் அரவை முத்து, பொருளாளர் அரிவின்ஸ், துணை செயலாளர்கள் சோமூர் ரவி, கஸ்தூரி தங்க ராஜ், சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

விழாவில் நகர செயலாளர் காந்தி, ஒன்றிய செயலாளர் ஜெயகுமார், பொதுக் குழு உறுப்பினர்கள் தனபால், ரெங்கநாதன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் குமார், கேப்டன் மன்றம் மாணிக்கம், பெரியண்ணன், மாணவரணி நவநீதகிருஷ்ணன், கலையரசன், சண்முகசுந்தரம், தொண்டரணி பழனிச்சாமி, துளசிமணி, மகளிரணி கமலம், வெள்ளையம்மா, யசோதா, சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை பொதுக்குழு உறுப்பினர் முருகன் சுப்பையா செய்திருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com