கரூர் அருகே இன்று வாகனம் மோதி தம்பதி பலி

கரூர் அருகே இன்று வாகனம் மோதி தம்பதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident
கரூர் அருகே இன்று வாகனம் மோதி தம்பதி பலி
Published on

வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்டம் சுக்கா லியூரை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 70). இவரது மனைவி பழனியம்மாள் (வயது 65). இவர்கள் 2 பேரும் இன்று அதிகாலை 4 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வேலாயுதம்பாளையத்தில் உள்ள உறவினர்களை பார்க்க சென்றனர்.

கரூர்-சேலம் தேசியநெடுஞ் சாலையில் மூலிமங்கலம் பிரிவு ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் அருகே செல்லும் போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் சிதம்பரம் மற்றும் அவரது மனைவி பழனியம்மாள் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் வேலாயுதம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகிறார். விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com