கரூர் அரசு கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி- 2 மாணவர்கள் கைது

கரூர் அரசு கல்லூரியில் ராக்கிங் கொடுமையால் மாணவர் தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
தற்கொலை முயற்சி
தற்கொலை முயற்சி
Published on

கரூர்:

கரூர் அருகே தாந்தோன்றி மலையில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் சேலத்தை சேர்ந்த விக்னேஷ் (வயது 19) என்பவர் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் மாணவர்கள் சிவசக்தி (19), நந்தகுமார் (19) ஆகியோர் பி.ஏ.3-ம் ஆண்டு படித்து வந்தனர்.

விக்னேஷ் தான்தோன்றிமலையில் உள்ள அரசு விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் விக்னேசை, சிவசக்தி, நந்தகுமார் ஆகியோர் பெண் பெயர் போல் மாற்றி அழைத்தும், தண்ணீர் எடுத்து வரக்கூறியும் ராக்கிங் செய்தனர்.

இதனால் மனமுடைந்த விக்னேஷ், விடுதியில் வைத்து வி‌ஷம் குடித்து விட்டார். உயிருக்கு போராடிய அவரை மற்ற மாணவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தாந்தோன்றி மலை போலீஸ் நிலையத்தில் விக்னேஷ் புகார் அளித்தார். .அதன் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து, சிவசக்தி, நந்தகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com