கரூர் மாவட்டத்தில் மரவள்ளிகிழங்கு விலை குறைவு- விவசாயிகள் கவலை

கரூர் மாவட்டத்தில் ஜவ்வரிசி விலை வீழ்ச்சியால் மரவள்ளிகிழங்கு விலை குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மரவள்ளிகிழங்கு
மரவள்ளிகிழங்கு
Published on

வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்டம் நொய்யல் வேட்டமங்கலம், ஒரம்பு பாளையம், ஓலப்பாளையம், நல்லிக்கோவில், கவுண்டன் புதூர், குளத்துப்பாளையம், புன்னம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளனர்.

இப்பகுதிகளில் விளையும் மரவள்ளிக்கிழங்குகளை நாமக்கல் மாவட்டம், புதன் சந்தை, புதுச்சத்திரம், செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, கீரனூர், நாமகிரி பேட்டை, தொ.ஜேடர்பாளையம், ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் சவ்வரிசி தயார் செய் தும் கிழங்கு மாவுமில்களுக்கு டன் கணக்கில் அனுப்பி வைக்கின்றனர். மில் உரிமையாளர்கள் மரவள்ளிக்கிழங்குகளை (டார்ச்) பாய்ண்ட் அடிப்படையில் வாங்குகின்றனர். கிழங்குகளில் எத்தனை பாயண்ட் டார்ச்சத்து இருக்கின்றதோ அதற்கு தகுந்தாற்போல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதேபோல் சவ்வரிசி விலை உயரும் போது மரவள்ளி கிழங்குக்கு விலை உயர்வும், வீழ்ச்சி அடையும் போது விலை குறைத்தும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 

கடந்த வாரம்ஜவ்வரிசி தயாரிக்கும் மில் உரிமையாளர்கள் ஒரு டன் மரவள்ளிக்கிழங்கு ரூ.12 ஆயிரத்து 500க்கு வாங்கிச்சென்றனர். ஜிப்சம் தயாரிப்போர் ஒரு டன் ரூ.13,500க்கு வாங்கிச் சென்றனர். இந்த வாரம் ஜவ்வரிசி தயாரிக்கும் மில் உரிமையாளர்கள் ஒரு டன் மரவள்ளிக்கிழங்கு ரூ.11,000-க்கும் அதேபோல் ஜிப்ஸ் தயாரிப்போர் ஒரு டன் ரூ.12,500-க்கும் வாங்கிச் சென்றனர். ஜவ்வரிசி விலை வீழ்ச்சியின் காரணமாக மரவள்ளிகிழங்கு விலை குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com