கரூர் மாவட்டத்தில் வெற்றிலை விலை உயர்வு

கரூர் மாவட்டத்தில் வெற்றிலை உற்பத்தி குறைவால் விலை உயர்ந்துள்ளது.இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் வெற்றிலை விலை உயர்வு
Published on

வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே புங்கோடை, சேமங்கி, முத்தனூர், கோம்பு பாளையம், திருக்காடுதுறை, தவுட்டுப் பாளையம், என்.புக ழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளக்கொடி, கற்பூரி போன்ற வெற்றிலை ரகங்களை ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும் வெற்றிலைகளை வேலாயுதம்பாளையம் பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும், விவசாயிகள் அசோசியேசன் வெற்றிலை மண்டிக்கும் அனுப்பி வைக்கின்றனர். இப்பகுதிகளிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்தரபிரதேசம், மத்தி பிரதோசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மற்றும் ரெயில் மூலம் அனுப்பிவைக்கின்றனர்.  

கடந்த வாரம் இளங்கால் வெள்ளைக்கொடி வெற்றிலை 104 கவுளி கொண்ட ஒரு சுமை ரூ.3500-க்கும், முதிகால் வெள்ளக்கொடி வெற்றிலை ரூ.1500-க்கும் அதேபோல் இளங்கால் கற்பூரி வெற்றிலை ரூ.3ஆயிரத்துக்கும், முதிகால் கற்பூரி வெற்றிலை ரூ.1300-க்கும் வாங்கி சென்றனர். 

இந்த வாரம் இளங்கால் வெள்ளைக் கொடி வெற்றிலை 104 கவுளி கொண்ட ஒரு சுமை ரூ.5500-க்கும், முதிகால் வெள்ளக்கொடி வெற்றிலை ரூ.2500-க்கும் அதேபோல் இளங்கால் கற்பூரி வெற்றிலை ரூ.4500-க்கும், முதிகால் கற்பூரி வெற்றிலை ரூ.3ஆயிரத்துக்கும் வாங்கி சென்றனர். வெற்றிலை உற்பத்தி குறைவால் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com