கரூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வன்கொடுமை சட்டத்தை கடுமையாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

கரூர்:

கரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில்  ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். வன்கொடுமை சட்டத்தை கடுமையாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், தாழ்த்தப்பட்ட மக்கள் விரோத போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்ரமணியன், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் முனீஸ்வரன், நகர தலைவர் ஆர். ஸ்டீபன் பாபு, சின்னையன், வட்டார தலைவர் ரவிச்சந்திரன், தான்தோன்றி குமார் ஆகியோர் பேசினர். 

ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com