கருங்கல் அருகே வீட்டின் முன்பு நின்ற பெண்ணிடம் 3½ பவுன் செயின் பறிப்பு

கருங்கல் அருகே வீட்டின் முன்பு நின்ற பெண்ணிடம் செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை பறிப்பு
நகை பறிப்பு
Published on

கருங்கல்:

கருங்கல் அருகே சியோன் பறை பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி ஜிவிலா (வயது 28).

இவர் நேற்று மாலையில் வீட்டின் முன்பு உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். அவர் ஜிவிலா அருகே வந்த போது திடீரென அவரது கழுத்தில் கிடந்த 3½ பவுன் செயினை பறித்தார்.

இதில் சுதாரித்து கொண்ட அவர் செயினை இறுக்கமாக பிடித்துக்கொண்டு திருடன், திருடன் என கூச்சலிட்டு அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். அவர்கள் வருவதற்குள் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஜிவிலாவின் கையை தட்டிவிட்டுவிட்டு 3½ பவுன் செயினை பறித்துச் சென்றார்.

இதுகுறித்து கருங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஜிவிலா கூறிய அடையாளங்களை கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த செயின் பறிப்பு சம்பவம் குறித்து கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com