கருங்கல் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

கருங்கல் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் செயின் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை பறிப்பு
நகை பறிப்பு
Published on

ராஜாக்கமங்கலம்:

கருங்கல் அருகே பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் லாசர். இவரது மனைவி ஜெபா(வயது 40). நேற்று மாலையில் வீட்டில் இருந்து மிடாலத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கருங்கல் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே சென்ற போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் ஜெபா அருகே வந்த போது மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த வாலிபர் ஜெபா கழுத்தில் கிடந்த 11 பவுன் நகையை பறித்தார்.

இதில் சுதாரித்துக் கொண்ட அவர் செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டு கொள்ளையனிடம் இருந்து நகையை மீட்க போராடினார். இதில் கொள்ளையன் கையில் 2 ½ பவுன் சிக்கியது.

இதையடுத்து ஜெபா திருடன்... திருடன்... என கூச்சலிட்டு அலறினார். அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அதற்குள் 2½ பவுன் நகையுடன் கொள்ளையர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து கருங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மோகனஅய்யர் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராஜாக்கமங்கலம் பேயோடு பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி ராஜம்மாள்(60). இவர் நேற்று காலையில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். அவர் ராஜம்மாளிடம் மாங்காய் குத்தகைக்கு கிடைக்குமா? என கேட்டார். இதற்கு ராஜம்மாள் பதில் கூறினார். திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ராஜம்மாளின் கழுத்தில் கிடந்த 2½ பவுன் செயினை பறித்தார். செயினை பிடித்துக் கொண்டு ராஜம்மாள் கூச்சலிட்டு அலறினார்.

அதற்குள் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இது குறித்த வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்யப்பட்டது.இன்ஸ்பெக்டர் தங்க ராஜ், ஏட்டு ராமஜெயம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com