கருங்கல் அருகே காண்டிராக்டர் வீட்டில் 15 பவுன் நகை கொள்ளை

கருங்கல் அருகே காண்டிராக்டர் வீட்டில் 15 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து கொள்ளை
வீடு புகுந்து கொள்ளை
Published on

கருங்கல் அருகே உள்ள மிடாலக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜான்ரோஸ். இவர் கேரளாவில் கட்டிட காண்டிராக்டராக பணி புரிந்து வந்தார். இவருக்கு கேரளா மாநிலம் அடூர் பகுதியிலும் ஒரு வீடு உள்ளது. கொரோனா பாதிப்பு தொடங்கிய நிலையில் கேரளாவுக்கு சென்ற ஜான்ரோஸ் திரும்பி வரவில்லை. இதனால் மிடாலக்காடு வீட்டை அருகில் உள்ள ருக்மணி ஒருவர் பராமரித்து வந்தார்.

இந்த நிலையில் ஜான்ரோஸ் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதுபற்றி அவருக்கு அந்த பெண் தகவல் கொடுத்தார். அதன்பேரில் ஜான்ரோஸ் வந்து பார்த்து விட்டு, 15 பவுன் நகை கொள்ளைபோனதாக கருங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com