கொழும்பு டெஸ்ட்: கருணாரத்னே சதத்தால் இலங்கை ரன் குவிப்பு - தோல்வியை தவிர்க்க போராட்டம்

இந்தியாவுடனான 2 வது டெஸ்டின் 4வது நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளை வரை, கருணாரத்னேவின் சதத்தால் இலங்கை அணி 4 விக்கெட்டுகளுக்கு 302 ரன்கள் எடுத்துள்ளது.
கொழும்பு டெஸ்ட்: கருணாரத்னே சதத்தால் இலங்கை ரன் குவிப்பு - தோல்வியை தவிர்க்க போராட்டம்
Published on

இதையடுத்து, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை தொடர்ந்தது. இந்திய அணியினரின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 183 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அஸ்வின் 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

இலங்கை அணி இந்தியாவை விட முதல் இன்னிங்சில் 439 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்ததால், இந்தியா பாலோ-ஆன் கொடுத்தது. இதனால் இலங்கை அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது.

தொடக்க வீரர்களாக உபுல் தரங்காவும், கருணாரத்னேவும் களம் இறங்கினர். உபுல் தரங்கா விரைவில் ஆட்டம் இழந்தார். அதன்பின், கருணாரத்னே- குசால் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

சிறப்பாக விளையாடி சதம் அடித்த மெண்டிஸ், 110 ரன்கள் எடுத்த நிலையில் பாண்டியா பந்தில் விக்கெட் கீப்பர் சகாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். 3-ஆவது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில், 4-ஆவது நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. அபாரமாக விளையாடிய கருணாரத்னே சதமடித்தார். ஆனால், புஷ்பகுமாரா அஸ்வின் பந்துவீச்சில் போல்டானார். அவரை தொடர்ந்து களமிறங்கிய சண்டிமாலை, ரவீந்திர ஜடேஜா பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார்.

அதன்பின்னர், கருணாரத்னேவுடன் ஜோடி சேர்ந்த மேத்யூஸ் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார். இலங்கை அணி உணவு இடைவேளை வரை 4 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்துள்ளது. கருணாரத்னே 136 ரன்களுடனும், மேத்யூஸ் 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com