முரசொலி பவள விழா: அரசியலுக்கு அப்பாற்பட்டு வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்த கருணாநிதி

அரசியலுக்கு அப்பாற்பட்டு முரசொலி பவள விழாவிற்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி நன்றி தெரிவித்துள்ளார்.
முரசொலி பவள விழா: அரசியலுக்கு அப்பாற்பட்டு வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்த கருணாநிதி
Published on

சென்னை:

சென்னையில் முரசொலி பவளவிழாவையொட்டி கலைவாணர் அரங்கில் வாழ்த்தரங்கம் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன், மற்றும் முன்னணி பத்திரிகை நிறுவனங்களின் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

முரசொலி பவள விழாவைக் கண்டு விழிகள் மட்டும் விரிந்திடவில்லை. சுவாசப் பைகளும் விரிந்திடுகின்றன. தமக்கு அன்பெனும் அமுதம் ஊட்டி ஆதரவு கரம் நீட்டிய தமிழ் பெருமக்களுக்கு நன்றி. என் கடன் பணி செய்து கிடப்பதே.  அரசியலுக்கு அப்பாற்பட்டு முரசொலி பவளவிழாவிற்கு வாழ்த்து தெரிவித்த தலைவர்களுக்கு நன்றி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com