கார்த்தி சிதம்பரம் ஆடிட்டரின் காவல் நீட்டிப்பு

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனின் காவல் மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. #KarthiChidambaram #INXMedia
கார்த்தி சிதம்பரம் ஆடிட்டரின் காவல் நீட்டிப்பு
Published on

சென்னை:

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற அனுமதி வழங்கிய விவகாரத்தில், சட்டவிரோதமாக பணம் கைமாறியதாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது. அவரை தேடப்படும் நபராக அறிவித்து லுக் அவுட் நோட்டீசும் வெளியிட்டது. இதனால் அவர் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 

எனவே, லுக் அவுட் நோட்டீசை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்.  அந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சமீபத்தில் மாற்றப்ப்டடது. 

இதற்கிடையே தொழில் விஷயமாக வெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தார். பிப்ரவரி 17 முதல் 28-ம் தேதி வரையிலான கார்த்தி சிதம்பரத்தின் பயணத்திட்டத்திற்கு அனுமதி அளித்த நீதிபதிகள், இந்த பயணத்திட்டம் தொடர்பான முழு  தகவல்களையும் சி.பி.ஐ.க்கு முன்கூட்டியே அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். 

அதேசமயம், லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்யக்கோரி கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த பிரதான வழக்கின் விசாரணை மார்ச் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனை கடந்த 16-ம் தேதி அமலாக்க துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவருக்கு விதிக்கப்பட்ட காவல் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அவரது காவலை நீட்டுக்குமாறு அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து அவரது காவல் மேலும் மூன்று நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. #KarthiChidambaram #INXMedia #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com