திப்புசுல்தான் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை: முதல் மந்திரி சித்தராமையா

திப்புசுல்தான் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை: முதல் மந்திரி சித்தராமையா

கர்நாடகா மாநிலத்தில் நடைபெறவுள்ள திப்புசுல்தான் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என முதல் மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
Published on

பெங்களூர்:

கர்நாடகா மாநிலத்தில் நடைபெறவுள்ள திப்புசுல்தான் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என முதல் மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக தென்னிந்தியாவில் மிகுந்த ஆதிக்கம் செலுத்தியவர் திப்புசுல்தான். இவரது பிறந்ததினமான நவம்பர் 10-ம் தேதியை ஆண்டுதோறும் கர்நாடக அரசு திப்பு ஜெயந்தி விழாவாகக் கொண்டாடி வருகிறது. திப்புசுல்தான் பிறந்ததின விழாவைக் கொண்டாடக் கூடாது என பா.ஜ.க., எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதற்கிடையே, இந்த ஆண்டு நடைபெறவுள்ள திப்புசுல்தான் பிறந்ததின விழா அழைப்பிதழில் எனது பெயரை சேர்க்க வேண்டாம் என மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், திப்புசுல்தான் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என முதல் மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல் மந்திரி சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறுகையில், திப்புசுல்தான் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. விழா அசம்பாவிதம் இன்றி நடப்பதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திப்புசுல்தான் பிறந்தநாள் விழா தொடர்பான அழைப்பிதழில் எம்.பி. என்ற முறையில் மத்திய மந்திரியின் பெயர் இடம்பெறுவது வழக்கமான நடைமுறைதான் என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com