காப்பி அடிப்பதை தடுக்க நூதன முறையில் மாணவ-மாணவிகளை தேர்வு எழுதவைத்த கல்லூரி

கர்நாடக மாநிலத்தில் தனியார் கல்லூரியில் மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதை தவிர்க்க அனைவரின் தலையிலும் அட்டைப்பெட்டி அணிவிக்கப்பட்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது.
மாணவர்கள் தலையில் அட்டைப்பெட்டியுடன் தேர்வு எழுதுவதை காணலாம்
மாணவர்கள் தலையில் அட்டைப்பெட்டியுடன் தேர்வு எழுதுவதை காணலாம்
Published on

பொதுவாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தேர்வு நடத்தும் போது அவர்கள் காப்பி அடிப்பதை தவிர்க்கவும், அருகில் உள்ள சக மாணவர்களை பார்த்து எழுவதை தவிர்க்கவும் பறக்கும் படையினர் சோதனை நடத்துவது வழக்கம்.

அதுபோல் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கும் கம்மல், மூக்குத்தி, கைக்கடிகாரம் உள்ளிட்டவற்றை அணிந்து எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கும் பணியும் நடப்பது நாம் அறிவோம்.இவ்வாறு தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதையும், பக்கத்தில் இருப்பவர்களை பார்த்து எழுதுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவது வாடிக்கையானது. ஆனால் கர்நாடகத்தில் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பது மற்றும் பக்கத்தில் இருப்பவர்களை பார்த்து எழுதுவதை தடுக்க நூதன முறையை கையாண்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதுபற்றி இங்கே விரிவாக காண்போம்...

கர்நாடக மாநிலம் ஹாவேரி (மாவட்டம்) டவுன் நிசர்கதாபா ரோட்டில் உள்ளது, பகத் பி.யூ. கல்லூரி. தனியாருக்கு சொந்தமான இந்த கல்லூரியில் தான் நூதன முறையில் மாணவ-மாணவிகளை தேர்வு எழுதவைத்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.

அது என்னவென்றால், நேற்று முன்தினம் இந்த பி.யூ. கல்லூரியில் தேர்வு நடந்தது. அப்போது மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதையும், அருகில் உள்ளவர்களை பார்த்து எழுதுவதை தடுக்கவும், தேர்வு எழுதிய அனைவரின் தலையில் அட்டைப்பெட்டி அணிவிக்கப்பட்டது. அந்த வினாத்தாளை பார்த்து விடைத்தாளில் எழுதுவதற்கு வசதியாக அட்டைப்பெட்டியில் இரு துளைகள் இடப்பட்டு இருந்தது. அதன் வழியாக மாணவர்கள் வினாத்தாளை பார்த்து, விடைத்தாளில் எழுதினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com