கட்சி பத்திரிக்கையாளர் சந்திப்பில் தூங்கி வழிந்த சித்தராமையா

கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்தராமையா, கட்சி பத்திரிக்கையாளர் சந்திப்பில் தூங்கி வழிந்தது ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
கட்சி பத்திரிக்கையாளர் சந்திப்பில் தூங்கி வழிந்த சித்தராமையா
Published on

பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. சித்தராமையா முதல்-மந்திரியாக உள்ளார். கர்நாடக காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. 

இந்த சந்திப்பில் கட்சியின் பொதுச் செயலாளரும், கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளருமான வேனுகோபாலுக்கு அருகில் சித்தாராமையா அமர்ந்து இருந்தார். 

வேனுகோபால் நிருபர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது, அருகில் அமர்ந்திருந்த சித்தராமையா லேசாக தூங்கி வழிந்தார். அது பத்திரிக்கையாளர் எடுத்த காட்சிகளில் பதிவானது. இதனை தொலைக்காட்சிகளும் செய்திகளில் ஒளி பரப்பினர்.

பொது சந்திப்புகளில் தூங்கி விழுவது சித்தராமையாவுக்கு புதிதல்ல. இம்மாத தொடக்கத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பு கமிட்டி கூட்டத்தில் இதேபோல் தூங்கி வழிந்துவிட்டார். இதேபோல் 2014-ம் ஆண்டு மூன்று முறை பொது நிகழ்ச்சிகளில் தூங்கியது தலைப்பு செய்திகளாக ஆனது.

68 வயதான சித்தராமையா சட்டசபையில் காரசாரமான விவாதம் நடைபெற்று கொண்டிருக்கும் போதும் விழித்திருக்க சிரமப்பட்டு வருவது வழக்கம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com