கர்நாடகா சட்டசபை சபாநாயகர் ரமேஷ் குமார் ராஜினாமா

கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதையடுத்து சட்டசபை சபாநாயகர் ரமேஷ் குமார் பதவி விலகினார்.
ரமேஷ் குமாரின் இறுதி வணக்கம்
ரமேஷ் குமாரின் இறுதி வணக்கம்
Published on

கர்நாடக மாநிலத்தில் 17 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்த நிலையில் சட்டசபையில் இன்று எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த தீர்மானத்தின்மீது காங்கிரஸ் உறுப்பினர் சித்தராமையா மற்றும் முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி ஆகியோர் விவாதித்தனர். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் பாஜக அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் வெற்றி பெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com