கர்நாடக சட்டசபை தேர்தல்- இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது

மே 12 ஆம் தேதி நடைபெற உள்ள கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இந்த மனு தாக்கல் செய்யும் பணி வருகிற 24-ந் தேதி வரை நடைபெறும்.#KarnatakaElection2018
கர்நாடக சட்டசபை தேர்தல்- இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது
Published on

பெங்களூரு:

கர்நாடக சட்ட சபைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் (மே) 12-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று (செவ்வாய்க் கிழமை) வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இதனால் தேர்தல் அலுவலகங்களை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் (மார்ச்) 27-ந் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஏப்ரல் 17-ந் தேதி (அதாவது இன்று) வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று(செவ்வாய்க்கிழமை) மாநிலம் முழுவதும் தொடங்குகிறது.

இந்த மனு தாக்கல் செய்யும் பணி வருகிற 24-ந் தேதி வரை நடைபெறும். மறுநாள் 25-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற 27-ந் தேதி கடைசி நாள் ஆகும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மனு தாக்கல் செய்ய முடியாது.

தினமும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம். இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குவதால், தேர்தல் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அத்துடன் மனு தாக்கல் செய்ய வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com