ரஞ்சி டிராபி பைனலுக்கு முன்னேறபோவது யார்?: விறுவிறுப்பான கட்டத்தில் கர்நாடகா-விதர்பா டெஸ்ட்

ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதியில் ஒருநாள் மீதமுள்ள நிலையில் கர்நாடகா அணியின் வெற்றிக்கு 87 ரன்களும், விதர்பா அணியின் வெற்றிக்கு மூன்று விக்கெட்களும் தேவைப்படுகிறது.
ரஞ்சி டிராபி பைனலுக்கு முன்னேறபோவது யார்?: விறுவிறுப்பான கட்டத்தில் கர்நாடகா-விதர்பா டெஸ்ட்
Published on

ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. புனேயில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் பெங்கால் - டெல்லி அணிகள் விளையாடின. இதில் டெல்லி அணி இன்னிங்ஸ் மற்றும் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் விதர்பா, கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. முதல் இன்னிங்சில் விதர்பா 185 ரன்களும், கர்நாடகா 301 ரன்களும் எடுத்தன. இதையடுத்து இரண்டாம் இன்னிங்சை ஆடி வரும் விதர்பா அணி, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து நான்காவது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய விதர்பா அணி 313 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. விதர்பா அணியில் கணேஷ் சதிஷ் அதிகபட்சமாக 81 ரன்கள் எடுத்தார். இதுதவிர ஆதித்யா சார்வேட் 55 ரன்களும், அபூர்வ் வான்கடே 49 ரன்களும் எடுத்தனர். கர்நாடகா அணி பந்துவீச்சில் வினய் குமார், ஸ்டூவர்ட் பின்னி ஆகியோர் தலா 3 விக்கெட்களும், ஸ்ரீநாத் அரவிந்த் 2 விக்கெட்களும், அபிமன்யூ மிதுன், ஷ்ரேயாஸ் கோபால் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் கர்நாடகா அணியின் வெற்றிக்கு 198 ரன்களை இலக்காக விதர்பா அணி நிர்ணயித்தது.

தொடர்ந்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கர்நாடகா அணி களமிறங்கியது. விதர்பா அணியினரின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கர்நாடகா அணியினர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் கர்நாடகா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. வினய் குமார் 19 ரன்களுடனும், ஸ்ரேயாஸ் கோபால் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். விதர்பா அணியின் பந்துவீச்சில் ராஜ்நீஷ் குர்பானி 4 விக்கெட்களும், சிதேஷ் நேரால் 2 விக்கெட்களும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com