கர்நாடகாவில் 20-ந்தேதி முதல் ராகுல் காந்தி 3-வது கட்ட பிரசாரம்

கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்காக வருகிற 20-ந்தேதி முதல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 3-வது கட்ட பிரசாரம் செய்யவுள்ளார். #RahulGandhi #KarnatakaPoll
கர்நாடகாவில் 20-ந்தேதி முதல் ராகுல் காந்தி 3-வது கட்ட பிரசாரம்
Published on

புதுடெல்லி:

கர்நாடக மாநில சட்ட சபை பதவி காலம் மே மாதம் 28-ந்தேதியுடன் முடிவடைகிறது. எனவே அங்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரசும், எதிர்க்கட்சியாக உள்ள பா.ஜனதாவும் அங்கு ஏற்கனவே முழு வீச்சில் பிரசாரத்தை தொடங்கி விட்டன.

காங்கிரஸ் கட்சி பெல்லாரியில் பிரசாரத்தை தொடங்கியது. இரண்டு கட்டங்களாக 6 மாவட்டங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார்.

3-வது கட்டமாக அவர் வருகிற 20-ந்தேதி முதல் கர்நாடகாவில் பிரசாரம் செய்கிறார்.

கடலோர பகுதி மற்றும் மைசூர் சுற்று வட்டாரங்களில் ராகுல் காந்தி பிரசாரம் செய்கிறார். இந்த பிரசாரத்தில் பொதுக் கூட்டங்கள், தெரு முனை சந்திப்பு, தொண்டர்கள் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். #RahulGandhi #KarnatakaPoll #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com