காரிமங்கலம் அருகே வாகனம் மோதி விவசாயி பலி

காரிமங்கலம் அருகே வாகனம் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே உள்ள குப்பாங்கரை பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது 50). விவசாயி. இவர் தனது மனைவி காளியம்மாளுடன் சைக்கிளில் பெரியாம்பட்டிக்கு சென்றார். சமத்துவபுரம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காளியம்மாளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com